உண்ணாநோன்பு மருத்துவம்
மருத்துவம்: ஆயுர்வேதம்உண்ணாநோன்பு மருத்துவம் மிகப் புராதனமானதோர் இந்தியமுறையாகும்.
இப்போது மீண்டும் அது ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்று ரூசிய நாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது என்று நான் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருந்த போது பல இந்திய மருத்துவர்கள் என்னிடம் கூறினர்.
உண்ணாநோன்பு மருத்துவம் பல நோய்களுக்கான மருத்துவமுறையாக நெடுங் காலத்திற்கு முன்னரே எகிப்து, இந்தியா, கிரோக்கதேசம், ஆகிய நாடுகளில் வழங்கிவந்தது. வரலாற்றிற்கு முற்பட்ட புராதன - மிகப் பழங்காலத்திலேயே மக்கள் இந்த முறையை கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. விலங்குகளின் உடல்நலம் கெட்டால், உடல்
நலம் சீரடையும் வரை, அவை தாமாகவே உணவு ஏற்பதை நிறுத்தி விடுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.
உண்ணாநோன்பு பற்றிய ரூசிய ஆய்வு:
இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி உண்ணாவிரத சிகிச்சை பழங் காலத்திலிருந்தே இருந்த வருகிறது. உடலிலுள்ள நச்சுப் பொருட்களை முதலில் அகற்றுவதற்கான ஒருவழி முறையேஉண்ணாநோன்பு! அதைத் தொடர்ந்து, பின்னர் நோயைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் கொடுக்கப் படுகின்றன. உண்ணாநோன்பு, யோகப் பயிற்சியிலும் ஒர் அம்சமாகும்.
18ம் நூற்றாண்டில் மொஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர்களான பிவெனியானொவ், ஐ ஸ்ராஸ்கி ஆகியோர் பல்வேறு வகையான நோய்களைத் தீர்ப்பதில் பட்டினி சிகிச்சையின் பயன்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெற்றி பெற்றார். வளர்-சிதை மாற்றக் கோளாறுகள் - குறிப்பாக கொழுப்புப் பொருள்களின் வளர்சிதை மாற்றம், பல்வேறு இரத்தவோட்ட மண்டல நோய்கள், நுரையீரல், ஆஸ்துமா, தோல் நோய்கள், ஆகியவற்றை குணப்படுத்துவதில் கட்டப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை அளிக்கும் பயன்கள் குறித்து சோவியத் மருத்துவரான, என். நார்பகோன் தமது ஆய்வுக்கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளார். முன்சிறுகுடல் வளைவு, இரப்பை ஆகியவற்றிலுள்ள புண்களை ஆற்றுவதில் அப்படிப்பட்ட உண்ணாவிரதச் சிகிச்சையின் வெற்றிகள் பற்றி ஏ.பாகுலேவ் என்பவர் ஆய்வுகள் நடத்தி வெற்றிகள் கண்டள்ளார்.
இருபது -முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோவியத் ரூசிய நாடுகளில்
உண்ணாநோன்பு மருத்துவம் பல்வேறு மருத்துவ மையங்களிலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தோல் தொடர்பான நோய்களுக்கு முக்கியமாக இம்முறை பின்பற்றப் படுகிறது.
மனப்பிளவு நோய்க்கு உண்ணா நோன்பு
சிலவகை மனக்கோளாறுகளுக்கு குறிப்பாக ஆரம்ப நிலையிலுள்ள மனப்பிளவு நோய்க்கு உண்ணாவிரத சிகிச்சைமுறையைப் பின்பற்றலாம் என்பதை ர~;ய மருத்தவர்கள் கண்டறிந்துள்ளனர். உடலில் எந்தவித நோயும் இல்லாதிருக்கும் போது கூடத் தாங்கள் நோயுற்றிருப்பதாக அச்ச உணர்வினால் துன்புறும் பல நோயாளிகளுக்கும் பல்வேறு பீதியுணர்வினால் தனிமைப்பீதி கூட்ட நெரிசலால் எற்படும் பீதி, இருட்டு, தொற்றுநோய், கூர்மையான பொருள்களைப் பற்றிய பீதி, ஆகியவற்றினால் அவதிப் படுவோருக்கும் இம்மருத்துவமுறை சிறந்த பலன்களை அளித்துள்ளது.
எங்கள் மருத்துவக்கூடத்தில் மட்டுமே நாங்கள் இதுவரை ஏழாயிரம் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு இம்முறையைக் கடைப் பிடித்திருக்கிறோம். குணப்படுத்துவது கடினம் என்று கருதப்பட்டு வந்த சில நோய்களைக் குணப்படுத்துவதிலும் இந்த முறை சிறந்த வெற்றிகளைத் தந்துள்ளது. எனினும் சீரான மருத்துவ மேற்பார்வையிலேயே இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வகை மருத்துவம் அளிக்கப் படும் நோயாளிகள் மருத்துவ மையத்தில் தனிக் கூடங்களில் வைக்கப் படுகின்றனர். நோயாளிகள் அவர்களது உறவினர்கள் ஆகியோரது ஒப்புதலின் பேரிலேயே இம்முறை கடைப்பிடிக்கப் படுகின்றது.
முதலில் நோயாளிகள் எல்லாவகையான ஆய்வுகளுக்கும் உட்படுகின்றனர். உண்ணாநோன்பு மருத்துவம் மேற்கொள்வதால் நோயாளிகள் எவ்வகையான பாதிப்பும் எற்படப் போவதில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இம் மருத்துவமுறை தொடங்கப் படுகிறது.
ஒவ்வொரு நோயாளியும் எத்தனை நாட்கள் உண்ணாநோன்பு இருக்க வேண்டும் என்பது அவரவரது நோய் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யப் படுகிறது. அந்தக் காலகட்டம் இருபது முதல் நாற்பது நாட்கள் வரை நீடிக்கலாம் உண்ணாநோன்பை நோயாளிகள் பின்பற்றும் போது அவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கப்படுவதில்லை.
மருத்துவ முறை
உணவு கிடைக்காமல் கட்டாயத்தின் பேரில் பட்டினி கிடக்கும் போது ஒரு மனிதனுக்கு சாவு தொடரலாம். அதற்கு மாறாக பட்டினி நிலை இங்கு ஒரு மனிதனது நோயைத் தீர்க்கப் பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில் இம் மருத்துவ முறை தொடங்கும் போது ஒரு மனிதனின் குடல் மண்டலம் அனைத்தும் முதலில் கழுவப்பட்டு உடலிலுள்ள எல்லா நச்சுப் பொருட்களும் அகற்றப்படுகின்றன. நோயாளிகளுக்கு குடிப்பதற்கு நிறைய நீரும் காலை வேளையில் நீர் மருத்தவமும் பொதுவான மசாஜ்மருத்துவமும் அளிக்கப் படுகிறது. அவர்கள் பெரும்பாலான நேரத்தை வெட்ட வெளியிலேயே கழிக்கின்றனர்.
பொதுவாக முதல் 3-5 நாட்களில் கட்டுப்படுத்தப் பட்ட தானியங்கு அமைப்புகள் தளர்ந்து பசியுணர்வு மறைந்துவிடுகிறது. உணவின் மணமோ அதைப் பார்ப்பதோ அவர்களைப் பாதிப்பதில்லை. எனினும் உணவு குறித்த இனிய நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றன அதிலும் நோயாளி அத்தகைய நினைவுகளிலிருந்து விடுபடாதிருந்தால் அவை மேன்மேலும் அவனைப் பாதிக்கவே செய்யும். மருத்துவரும் உளவியல் சிகிச்சையாளரும் இந்தக் கட்டத்தில் நோயாளிக்கு உதவுகின்றனர்.
ஆறாவது அல்லது ஏழாவது நாளில் தான் மிக்க கடுமையான அனுபவம் ஏற்படும். அப்பொழுதுதான் உடல் தன்னுள்ளேயுள்ள அற்றல் சேமிப்புகளையே உணவாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றது. இந்த நெருக்கடியான கட்டமும் குறுகிய கால அளவுக்கே நீடிக்கும். அதன் பின்னர் நோயாளிக்கு அவ்வளவு சிரமம் இருக்காது. அவனது மன உணர்வும் பலமும் அதிகரிக்கும். அவனிடமிருந்த முதன்மை நோய் குறையத் தொடங்குகிறது. உடலின் ஆற்றல் சேமிப்பு அனைத்தும் தீரும்வரை இந்நிலை நீடிக்கும்.
உடல் புனரமைக்கப் படுகிறது.
முப்பது அல்லது முப்பத்தைந்து நாட்களில் ஒருவர் இந்த நிலையை அடைகின்றார். இதற்குள்ளாக அந்த நோயாளியின் நாக்கு தூய்மையடைந்து தோலும் ஒருவித இளஞ் சிவப்பு நிறத்தை அடைகிறது. வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கி அவனுக்கு கோரப் பசி உணர்வு மேலிடுகின்றது. இந்தக் கட்டத்தில்தான் அடுத்த மிக முக்கியமான புனரமைப்பு நிகழ்ச்சி தொடங்கப் படுகின்றது.
முதலில் நோயாளிக்கு நீர்த்த பழச்சாறு கொடுக்கப் படுகிறது. பின்னர் படிப்படியாக நீர் சேர்க்காத பழச்சாறும் அதன் பின்னர் கஞ்சி வேகவைத்த காய் கறி சூப் போன்றவை மெல்ல மெல்லக் கொடுக்கப்படுகின்றது.
சாப்பிடத் தொடங்கி முப்பது அல்லது நாற்பதாவது நாளில்தான் அவனுக்கு வழக்கமான முழு உணவு கொடுக்கப் படுகின்றது.
உண்ணாநோன்பு காலத்தில் ஒரு நோயாளி மொத்தத்தில் சராசரி பதினைந்து முதல் இருபது சதவிகித எடையை இழக்கின்றார். ஆனால் மிகவும் பருமனானவர்கள் எடைக் குறைப்பிற்காகவே இந்தச் சிகிச்சை முறையைக் கடைப்படித்தால் இழப்பு அதிகமாக இருக்கும்.
முடிவுரை
இந்த முறையில் ஜந்து உயிரியல் அம்சங்கள் உள்ளன.முதலாவது நரம்பு மண்டலத்திற்கும் மூளைக்கும் தற்காப்பு அடங்கல் என்ற நிலைக்கு முழு ஓய்வு கிடைக்கின்றது.இரண்டாவது உடலிலிருந்து நச்சுப்பொருள் நீங்க உடல் தூய்மை செய்யப்படுகின்றது. மூன்றாவது ஒருவிதக் கூர்மையான உள் அடங்கல் ஏற்படுவதானது பின்னர் ஏற்படும் புனரமைவுக்குத் தூண்டுதலாக ஆகின்றது. நான்கவதாகதிசுக்கள் தீவிரமாகத் தாமே புதுப்பிக்கப் படுகின்றன.ஜந்தாவதாக உடலின் எல்லா உறுப்பு மண்டலங்களும் குறிப்பாக நாளமில்லாச் சுரப்பு மண்டலம் ஒரு விதத் தகைவு நிலைக்கு உட்படுத்தப் படுகின்றது. பிற எல்லா உறுப்புகளையும் போன்றே உண்ணாநோன்பு சிகிச்சையின் போது மூளையும் அதிலுள்ள நச்சுப் பொருள்களை இழந்து புத்துயிர் பெறுகின்றது. மேலும் அதற்கு கணிசமான அளவு ஓய்வும்
தரப்படுகின்றது. மூளை ஆற்றலின் பெருமளவைப் பயன்படுத்தக் கூடியது
செரிமான மண்டலமேயாதலால் உணவின்றி இருக்கும்போது அது நல்ல ஓய்வு பெறுவது இயல்பே. இதுதான் உளவியல் கோளாறுகள் சீரடைவதன் அடிப்படை இரத்தநாள இறுக்க நோயாளிகள் நல்ல நினைவாற்றலைப் பெறுவதுடனே உணர்ச்சிப் பாதிப்புகளினின்றும் விடுபடுகின்றனர்.
- பேராசிரியர் யூரி நிக்கோலயேவ்
நன்றி: நல்வழி

No comments:
Post a Comment