ACUSIDDHA developed by Dr.V.Pandikumar MBA, MD (Acu)

Monday, December 6, 2010

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்! - Herbal drinks for good health

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்.

துளசி இலை டீ:
சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்
ஆவாரம்பூ டீ:
காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.
செம்பருத்திப்பூ டீ:
ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.
கொத்தமல்லி டீ:
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.
புதினா இலை டீ:
புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
கொய்யா இலை டீ:
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.
முருங்கைக் கீரை டீ:
முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.
குறிப்பு:
டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

Sunday, November 28, 2010

பன்றிக்காய்ச்சலை தடுக்கும் சித்த மருந்துகள்

பன்றிக்காய்ச்சலை தடுக்கும் சித்த மருந்துகள்
  தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா காய்ச்சல் பரவியபோது சித்த மருந்துகளின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே தமிழக அரசு பரப்பியதைப் போன்று பன்றிக் காய்ச்சலைத்  தடுப்பதற்கும் சித்த மருந்துகள் பயன்படும் என்பதை பொதுமக்களிடையே பரப்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் தெ.வேலாயுதம், சித்த மருத்துவ நிபுணர் ஜி.சிவராமன்,
   ’பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அலோபதி முறையில் மூக்கில் தடுப்பு மருந்து ஸ்பிரே செய்தல் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது.
 
தடுப்பு மருந்துக்கு சென்னை மாநகராட்சி சோதனைக்கூடங்களில் 100-ம், தடுப்பூசிக்கு ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிகக் குறைந்த செலவிலான சித்த மருந்துகளை பன்றிக் காய்ச்சல் தடுப்புக்குப் பயன்படுத்த முடியும்.
தடுப்பு சித்த மருந்துகள் என்ன? கபத்துக்கு உரிய நோய்க்குறிகளையே பன்றிக் காய்ச்சலும் கொண்டுள்ளதால், நிலவேம்புக் குடிநீரை உள்ளடக்கிய கபசுரக் குடிநீர் (தூள்), உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கக்கூடிய பிரம்மானந்த பைரவம் மாத்திரை, அமுக்கரா மாத்திரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதுமானது.
 அதாவது, கபசுரக் குடிநீரை (தூள்) நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் 40 மில்லி சாப்பிட வேண்டும்; அத்துடன் பிரம்மானந்த பைரவம் ஒரு மாத்திரை, அமுக்கரா 2 மாத்திரை ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
இவ்வாறு தொடர்ந்து 3 நாள்கள் சாப்பிட்டாலே பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு உரிய ஆற்றல் உடலுக்குக் கிடைத்து விடும். பக்க விளைவுகள் இல்லாத இந்த மருந்துகளை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் உள்பட அனைவரும் சாப்பிடலாம்.
எங்கே கிடைக்கும்? பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் மேலே குறிப்பிட்ட கபசுரக் குடிநீர் (தூள்) உள்ளிட்ட சித்த மருந்துகள் தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ முறை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் இந்த மருந்துகள் கிடைக்கும்.
 எனினும் பொது மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த சித்த மருந்துகளை இலவசமாக வழங்க தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்''என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்

திப்பிலி

 திப்பிலி
திப்பிலி என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கும். சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேலையும் கொடுத்தால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரர்கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் மேற்கூறிய அனைத்து வியாதிகளும் நீங்கும்

முருங்கைகீரை

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%

புரதம்-6.7%

கொழுப்பு-1.7%

தாதுக்கள்-2.3%

இழைப்பண்டம்-0.9%

கார்போஹைட்ரேட்கள்-12.5%

தாதுக்கள்,வைட்டமின்கள்,

கால்சியம்-440 மி,கி

பாஸ்பரஸ்- 70மி.கி

அயம்- 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

Saturday, November 27, 2010

பிரண்டை

பிரண்டை

பிரண்டை நாம் அனைவரும் அறிந்த அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை ஆகும்.பிரண்டையை இளசாக உள்ளவற்றை  மேற்தோல் சீவி விட்டு உள் இருக்கும் கணுக்களை நன்றாக நெய்யில் வதக்கி சிறிதளவு புளி சேர்த்து துவையலாக அரைத்து சோற்றில் பிசைந்து தின்றால் அரோசகம் என்னும் சுவையின்மை, மற்றும் பசியின்மை ஆகியவை தீரும். இதை அனைவரும் சாப்பிடலாம்.

Friday, November 26, 2010

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தெடுத்து அதன் சாற்றை சமையலில் பயன்படுத்துகிறோம். சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.
எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்;தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.
இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவத.

இதனைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஊறுகாய்க்கு பயன்படும் என்பதுதான். இதில் வைட்டமின் சி யும், அஸ்கார்பிக் ஆசிட்டும் இருப்பது தெரியாது.
மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.
உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். …ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா? இந்தமாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதைவிட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது. எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலு}ட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும்.
நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்

ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

அன்னாசி பழம்

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறத
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

அத்திப்பழம்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்

Friday, October 8, 2010

சீத்தாப்பழம் - Custard Apple

சீத்தாப்பழம் - Custard Apple

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.மருத்துவ பயன்கள்:1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்

தேன் - Honey

தேன் - Honey

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது. மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும். எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும். அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும். இரத்த சோகையை அகற்ற: நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன. தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன். தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும். தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது. சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு. தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள். டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது. முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள். தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன: சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.

பப்பாளி - Papaya

பப்பாளி - Papaya

பப்பாளியின் பயன்கள் ஏராளம்

பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின், போலிக்அமிலம், பொட்டசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, நார்ச்த்துக்கள் உள்ளன.
ஆராய்ச்சியில் பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2 விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.
பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .
சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.
பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.
இந்தப் பழத்தில்தான் எத்தனையெத்தனை சத்துகள், வெவ்வேறு விதமான மருத்துவ குணங்கள்...
சுமார் 30 கிராம் அளவிலான பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வாமாயின், அதில் வைட்டமின் பி 1- 11 மில்லிகிராம்; பி2 - 72 மில்லி கிராம்; வைட்டமின் சி - 13 மில்லி கிராம்; இரும்புச் சத்து - 0.1 மில்லி கிராம்; சுண்ணாம்புச் சத்து - 0.3 மில்லி கிராம் இருப்பதைக் காணலாம்.
விலைமதிப்புடைய ஆப்பிளைக் காட்டிலும் பப்பாளியில் அதிக அளவிலான உயிர்சத்துக்கள் (வைட்டமின்) இருக்கிறது என்பதால், இப்பழத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
இதிலுள்ள மருத்துவ குணங்களைக் காண்போமானால், மேலும் வியப்பு உண்டாகும் என்பது தெளிவு.
இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் பப்பாளி பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும் வல்லமையும் இப்பழத்துக்கு உள்ளது.
உடலுக்கு ஆரோக்கியத்தை நல்கி, சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு வழிவகை செய்யும் பப்பாளி பழத்தை, நாம் அன்றாடம் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.
பப்பாளி எல்லா சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய பழப்பயிர். தானாகவே வளரக்கூடியது, மிக குறைவான கவனிப்பே போதுமானது இந்த மரம். ஆனால் அது தரும் பலனோ மிக அதிகம். ஆனாலும் நோயாளிகளைப் பார்க்க செல்பவர்கள் கூட ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற விலை அதிகமான, பப்பாளியை விட சத்துக்குறைவான கனிகளைத்தான் வாங்கி செல்கிறார்களே தவிர, பப்பாளியைக் கவனிப்பாரில்லை.
பப்பாளி பனைபோல பருத்து உயர்ந்து வளர்ந்தாலும் முருங்கையைப் போலவே பலமற்ற மரம் இது. எளிதில் முறிந்துவிடும் தன்மைகொண்ட இம்மரமானது, சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.
ஆசிய நாடுகளில் சுமார் 10லட்சம் டன்கள் பப்பாளி உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியாவில் பப்பாளி பழங்கள் 3 லட்சத்தி 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறார்கள்.பப்பாளி பழத்தின் விதைகள் மற்றும் தோலை நீக்கிய பின் மற்ற பழங்களை விட அதிக அளவு (75 சதவீதம்) வீணாகாமல் உண்ணத்தக்கதாக உள்ளது. ஆனால் இதை நீண்டநாள் பாதுகாத்து பயன்படுத்த முடியாது.
100கிராம் பப்பாளிப் பழத்தில் 57மி.கிராம் வைட்டமின் சி உள்ளது. 100 கிராம் பப்பாளிப்பழத்தில் வெறும் 32கிலோ கலோரி ஆற்றலே கிடைக்கிறது. எனவே இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பும் பழமாக குணநலன்களைப் பெற்றுள்ளதுஆப்பிள், கொய்யா, சீத்தாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவு கரோட்டின் சத்து உடையது பப்பாளி பழம் ஆகும்.
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பொதுவாக இந்திய குழந்தைகளிடையே காணப்படும் வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தடுக்கமுடியும்.
பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள "பப்பாயின்" என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது.
எனவேதான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.
இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது அமெரிக்க உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.
பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்றுநோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது.
ஆப்பிரிக்காவில் பப்பாளி வேரானது கிரந்தி எனும் பால்வினை நோயை (சிபிலிஸ்) குணப்படுத்தவும், இலையானது இழுப்பு (ஆஸ்துமா) நோயின்போது புகைபிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவைச்சோந்த மக்கள் பப்பாளி (வாத) நோயிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். கியூபாவில் பப்பாளிப் பாலானது (சோரியாஸிஸ்) காளாஞ்சகப்படை மற்றும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
பப்பாயின் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.
பப்பாளியின் பயன்களை மனதில் பதிய வைத்துக்கொள்ள சுருக்கமாக;
பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும், நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் பப்பாளி பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும் வல்லமையும் இப்பழத்துக்கு உள்ளது.
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
ஆகவே இறைவன் அளித்த சிறந்த இப்பழத்தினை உண்டு நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழுங்கள்.

ஆப்பிளும், ஆரோக்கியமும் - APPLE AND HEALTH

ஆப்பிள் (APPLE)

காஷ்மீர் ஆப்பிள்! சொல்லும்போதே சுவையாக இருக்கிறதல்லவா! ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது.
மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.
பொதுவாகவே பழவகைகளில் ஆப்பிள் உயர்ந்த பழம். நல்ல பலத்தை தரும். அதிக இரத்தம் விருத்தியாகும். பழவகைகளில் முக்கியமானது ஆப்பிள். ஸ்காண்டிநேவியர்கள் ஆப்பிளை, இறைவனின் உணவு என்கின்றனர்.
ஆப்பிளில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆப்பிள் சதைப்பற்றுள்ள பழம். 80 சதவிகிதம் தண்ணீர், குறைந்த கலோரிகள் கொண்டது. இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும், பாஸ்பரஸ், கால்ஷியம், இரும்பு, ப்ரக்டோஸ், சுக்ரோஸ் முதலான சர்க்கரை, மாவுச்சத்து, நார்ச்சத்து முதலானவை அடங்கியுள்ளன.
சுமார் 12 மீட்டர் உயரம் வரை வளரும். முட்டை அல்லது நீள்வட்ட வடிவமான இலைகள் அடிப்பகுதி அகன்று மேற்புறம் மழமழப்பாக இருக்கும். இலை விளிம்புகள் இரம்பம் போலிருக்கும். இலைகள் பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு இந்த நிறங்கள் அனைத்தின் சாயலும் கொண்டதாக இருக்கும். இதன் மலர்கள் ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் பெரிய கொத்தாகப் பூக்கும். மலர்கள் மிகுந்த நறுமணம் உடையவை.
ஆப்பிளை பழமாக, சாறாக, ஜெல்லியாக, சர்பத்தாக உண்ணலாம். சரிவிகித சத்துணவில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆப்பிள் பழத்தைக் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படும். இரத்த சோகை குணமாகும். ஜலதோசம், மூச்சு சம்பந்தமான வியாதிகள், சருமநோய்கள், வயிறு சம்பந்தமான நோய்கள் முதலியன அவ்வளவமாகப் பாதிப்பதில்லை. சருமம், முகம் முதலியன பளபளக்கும்.ஆப்பிள் பழத்திலுள்ள வைட்டமின் B1 உயிர்ச்சத்து உடலுக்குப் பல நன்மைகளை செய்யக் கூடியதாக இருக்கிறது. தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் சீதளத்தை உண்டு பண்ணும். பழத்திலுள்ள B1 உயிர்ச்சத்து இதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும். மனசந்தோஷத்தை உண்டு பண்ணும். மனோதைரியம் உண்டாக்கும். உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்கச் செய்யும். மலச்சிக்கலை நீக்கும். இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை நல்ல பலத்தைக் கொடுக்கும்.
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு இன்ஷா அல்லாஹ் குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.
மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிடும் பலக்கத்தைக் கொண்டுள்ளதால் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள். இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்து, ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.
குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் அழிந்துவிடும்.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.
உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.
ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும். குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் குதிகால் வாதம் படிப்படியாகக் குறைந்து குணமாகும்.
சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு நோய் நிவாரணம் :
நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.
இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.
பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த அப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய அப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங் களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.
விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து அப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.
வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
ஆப்பிள் ஜூஸ்:
ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.
ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும். மூளைக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

பசலைக்கீரை - Spinach

கொழுப்பைக் கரைக்கும் பசலை!
(Spinach dissolves fat)

கார்ட்டூன் நாயகன் பாப்பாய்க்கு மிகவும் பிடித்தது பசலைக்கீரை. "என் புஜபல ரகசியம் இந்த கீரை தான்" என்று குழந்தைகளிடம் பிரபலப்படுத்தினான்.
உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி.
பசலை ஆசியாவில் முதலில் பழக்கத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. பிரபலமானது 1800-களில். பிரான்ஸ், இங்கிலாந்து வந்து பின் அமெரிக்காவுக்குப் போனது. மக்கள் அதிக நேரம் வேகவைத்ததால் சாம்பல் கலருக்கு மாறி வாசனையும் போய் சத்தெல்லாம் வீணானது. அப்புறம்தான் கீரையை எவ்வளவு ஃப்ரஷ்ஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து வீணாகாது என்று புரிந்தது.
இந்தக் கீரை ஆண்டு முழுவதும் கிடைக்கும். குளிர்காலத்தில் இளசாக கிடைக்கும். மணமும் அலாதி. ஹிந்தியில் இதை பாலக் என்பார்கள்.
பசுமையாக ஈரப்பசையுடன், கரும்பச்சை நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் இலைகள் இருந்தால் கீரை பழசு. தண்டு மெலிதாக இருந்தால் இளசு. முகர்ந்து பார்த்தால் அதன் பச்சை வாசனையிலேயே தெரியும் புதியது என்று.
சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள் வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாகபோட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.
கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு காற்றோட்டமாக சிறிதுநேரம் வைத்தால் உள் ஈரம் போய்விடும். அலசும் போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே போதுமானது. கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் கடைசியில் கொஞ்சம் போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால் உப்பு கரிக்கும். குறைந்த நேரமே வேகவைக்கவும்.
உணவுச்சத்து:
இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.
ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம், தக்காளி சேர்த்து கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க்குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.

அகத்திக்கீரை - Sesbania grandiflora

அகத்திக்கீரை - Sesbania grandiflora

வெற்றிலைக்கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறு மென்மையான மர வகை அகத்தி. தமிழ்நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் தரும் மருந்தாகவும் பயன்படுகிறது.
அகத்தியில் இருவகையுண்டு, வெள்ளைப் பூ உடையது அகத்தி என்றும், செந்நிறப் பூவுடையது செவ்வகத்தி எனப்படும்.
வேறு பெயர்கள்: அச்சம், முனி, கரீரம், சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி,
ஆங்கிலத்தில்: Sesbania grandiflora
அகத்திக்கீரையின் மருத்துவக் குணங்கள்:
அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. அளவு இருவேளை குடித்து வர காய்ச்சல், தாகம், கைகால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.
அகத்தி இலைச்சாறும், நல்லெண்ணெய்யும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமாகக் காய்ச்சி வடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்ச வேர் வகைக்கு 20 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்துவரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.
சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடவும் செய்யும்.
இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.
காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.
குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.
அகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் சம அளவாக எடுத்து அரைத்து வாதவீக்கத்திற்கும், கீல் வாயுக்களுக்கும் பற்றிட குணமாகும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

Thursday, October 7, 2010

குத்தூசி மருத்துவம் (Acupuncture)

குத்தூசி மருத்துவம் (Acupuncture)

ஹூ சூவில் இருந்து குத்தூசி மருத்துவம் விளக்கப்படம் (1340கள், மிங் வம்சம்). இந்த உருவப்படம் ஷை சி ஜிங் ஃபா ஹூயில் இருந்து எடுக்கப்பட்டது (இதில் 14 நடுக்கோடுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன). (டோக்யோ : சுஹாராயா ஹெய்சூக் காங்கோ, க்யோஹோ கான் 1716).
குத்தூசி மருத்துவம் (Acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக உடலில் ஊசிகளைச் செருகுவதற்கான மற்றும் கையாளுவதற்கான செயல்முறை ஆகும்[1]. குத்தூசி மருத்துவம்: வலி நிவாரணத்துக்கு, சிகிச்சைசார் உணர்வகற்றலைத் தூண்டுவதற்கு மற்றும் நோய்தீர்க்கும் நோக்கத்திற்காக நயமான ஊசிகளை வைத்து உடலில் உள்ள புறத்திய நரம்புகள் நெடுகிலும் குறிப்பிட்ட பகுதிகளில் துளையிடும் சீன நடைமுறை ஆகும்.
குத்தூசி மருத்துவத்தின் ஆரம்பகால எழுத்துப்பதிவு சீன உரைநடை ஷிஜி (史記, ஆங்கிலம்: Records of the Grand Historian ) ஆகும். அதன் வரலாற்றின் விரிவாக்கம் இரண்டாம் நூற்றாண்டு BCE மருத்துவ உரைநடையான ஹுவாங்டி நெய்ஜிங் கில் (黃帝內經, ஆங்கிலம்: Yellow Emperor's Inner Canon ) இருந்தது.[2] குத்தூசி மருத்துவத்தின் மாறுபட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கின்றன மற்றும் கற்பிக்கப்படுகின்றன. குத்தூசி மருத்துவமானது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இயக்கத்தில் உள்ள அறிவியல் சார் ஆராய்ச்சியின் பொருளாக இருக்கிறது.[3] ஆனால் இது வழக்கமான மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் சிகிச்சை மருத்துவர்களுக்கு இடையில் சர்ச்சைக்குரியதாக நீடித்திருக்கிறது.[3] குத்தூசி மருத்துவம் சிகிச்சையின் துளையிடல் இயல்பின் காரணமாக முறையான அறிவியல் சார் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை உருவாக்குவது சிரமமானதாக இருக்கிறது.[3][4][5][6][7] இந்த சிகிச்சையை மருந்துப்போலி விளைவு மூலமாக பெருமளவில் விவரிக்க இயலும் என குத்தூசி மருத்துவத்தின் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட சில அறிஞர்களின் மதிப்பீடுகள் முடிவு செய்திருக்கின்றன.[8][9] அதே சமயம் மற்றவர்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளில் சிகிச்சையின் சில உச்சவினையை வலியுறுத்துகின்றனர்.[3][10][11] ஒரு குத்தூசி மருத்துவம் நிபுணர் உலக சுகாதார நிறுவனத்துக்காக குத்தூசி மருத்துவத்தின் சிகிச்சை சார்ந்த சோதனைகளின் மதிப்பீட்டை வெளியிட்டார். அதில் பல நிலைகளுக்கான சிகிச்சையில் இது பயன் மிக்கதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.[12] ஆனால் அந்த அறிக்கை துல்லியமாக இல்லாமலும், தவறான வழி கூறுவதாக உள்ளதாகவும் மருத்துவ அறிஞர்களால் பொதுவாக விமர்சிக்கப்பட்டது.[13] மாற்று மருத்துவ உரைகள் சிறப்பு குத்தூசி மருத்துவம் நுட்பங்கள் நரம்பிய நிலைகளுக்கான சிகிச்சைக்கும் வலி நிவாரணத்திற்கும் பயன் மிக்கதாக இருக்கலாம் என அறிவித்திருக்கின்றன.[14] ஆனால் அது போன்ற அறிவிப்புகள் அறிவியல் அறிஞர்களால் மோசமான ஆராய்ச்சி முறையைப் பயன்படுத்தி ஆய்வுகளில் ஒருதலைச்சார்பு மற்றும் நம்பிக்கை கொண்டிருந்ததன் காரணமாக விமர்சிக்கப்பட்டது.[13][15] நேசனல் சென்டர் ஃபார் காம்ப்ளிமெண்டரி அண்ட் ஆல்டர்னேட் மெடிசினின் (National Center for Complementary and Alternative Medicine) (NCCAM) அறிக்கைகள், அமெரிக்க மருத்துவச் சங்கம் (American Medical Association) (AMA) மற்றும் பல்வேறு அரசாங்க அறிக்கைகள் குத்தூசி மருத்துவத்தின் பலாபலன் (அல்லது அதில் உள்ள குறைப்பாடு) குறித்து ஆய்வு செய்து கருத்து தெரிவித்திருக்கின்றன. நன்கு பயிற்சி பெற்ற நிபுணர் மூலமாக நுண்ணுயிரற்ற ஊசிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குத்தூசி மருத்துவம் சிகிச்சை பாதுகாப்பானது எனப் பொதுவான உடன்பாடு இருக்கிறது. மேலும் இது குறித்து தொடர்ந்து ஆய்வு தேவையாக இருக்கிறது.[4][16][17][18]
பொருளடக்கம்
[மறை]
1 வரலாறு
1.1 பண்டைக்காலம்
1.2 மத்தியகால வரலாறு
1.3 நவீன காலம்
2 பாரம்பரியக் கோட்பாடு
2.1 பாரம்பரிய சீன மருத்துவம்
2.2 குத்தூசி மருத்துவப் புள்ளிகள் மற்றும் நடுக்கோடுகள்
2.3 பாரம்பரிய நோயறிதல்
2.4 பாரம்பரிய சீன மருத்துவக் கண்ணோட்டம்

//
வரலாறு
பண்டைக்காலம்
சீனாவில் குத்தூசி மருத்துவத்தின் உருவாக்கமானது உறுதியற்றதாக இருக்கிறது. போரில் அம்புகளினால் காயம்பட்ட சில படைவீரர்கள் சிகிச்சையளிக்க இயலாமல் இருந்த நீண்ட காலச் சிக்கல்களில் இருந்து குணமடைந்ததாக விளக்கங்கள் இருக்கின்றன.[19] மேலும் இந்தக் கருத்தில் பல மாறுபாடுகளும் இருக்கின்றன.[20] சீனாவில் குத்தூசி மருத்துவம் நடைமுறை பியான் ஷி அல்லது கூரான கற்களைப் பயன்படுத்தி கற்காலத்திற்கு வெகுகாலதிற்கு முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தடயங்கள் தெரிவிக்கின்றன.[21] 1963 ஆம் ஆண்டில் பியான் கல் மங்கோலியாவில் ட்யோலோன் கவுன்ட்டியில் கண்டறியப்பட்டது. இதனால் குத்தூசி மருத்துவத்தின் மூலங்கள் புதிய கற்காலத்தில் இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.[22] இரகசியக் குறியீடுகள் மற்றும் ஓவிய எழுத்துக்கள் ஷாங் வம்ச (பொதுக்காலத்துக்கு முன்பு 1600-1100) காலகட்டத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அதன் படி குத்தூசி மருத்துவமானது மோக்சிபஸ்டியன் உடன் சேர்த்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.[23] பல நூற்றாண்டுகளாக உலோகவியலில் மேம்பாடுகள் இருந்த போதிலும் பொதுக்காலத்துக்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டு வரை ஹேன் வம்ச காலத்தில் அந்தக் கல் மற்றும் எலும்பு ஊசிகள் உலோகமாக மாற்றப்பட்டன.[22] குத்தூசி மருத்துவத்தின் ஆரம்பகாலப் பதிவுகள் ஷிஜி யில் (史記, ஆங்கிலத்தில, Records of the Grand Historian ) இருக்கின்றன. அதனுடன் தெளிவற்ற பிந்தைய மருத்துவ குறிப்புகளும் இருந்தன. ஆனால் அது குத்தூசி மருத்துவம் குறித்து விவாதிக்கும் வகையில் மாற்றம் செய்ய இயலும் வகையில் இருந்தன. குத்தூசி மருத்துவம் குறித்து விவரித்திருந்த ஆரம்பகால சீன மருத்துவக் குறிப்பு ஜாம்பவான் எல்லோ எம்பரரின் ( Yellow Emperor) உள் மருத்துவத்தின் முதல்நிலை (குத்தூசி மருத்துவத்தின் வரலாறு) என்ற ஹுவாங்டி நெய்ஜிங் காக இருக்கிறது. அது கி.மு 305–204 காலகட்டங்களுக்கு இடையில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஹுவாங்டி நெய்ஜிங் குத்தூசி மருத்துவம் மற்றும் மோக்சிபஸ்டியன் இரண்டுக்கும் இடையில் வேறுபாடுகளைக் குறிப்பிடவில்லை. மேலும் இரண்டும் சிகிச்சைகளுக்கும் ஒரே பயன்படுத்தும் விதத்தைக் கொடுத்திருந்தது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இருக்கும் மாவாக்ட்வி குறிப்புகள் ஷிஜி மற்றும் ஹுவாங்டி நெய்ஜிங் ஆகிய இரண்டுக்கும் முன்னாள் இருந்த போதும் சீழ்பிடித்த கட்டிகளைத் திறப்பதற்கு கூரான கற்களைப் பயன்படுத்துதல் மற்றும் மோக்சிபஸ்டியன் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் குத்தூசி மருத்துவம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை. ஆனால் பொதுக்காலத்துக்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டில் உள்பரவிய நிலைகளில் முதன்மையான சிகிச்சையாக மோக்சிபஸ்டியனுக்கு மாற்றாக குத்தூசி மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது.[2]
ஐரோப்பாவில் ஓட்சி த ஐஸ்மேனின் (Ötzi the Iceman) 5,000-ஆண்டு-பழமையான பதப்படுத்தப்பட்ட உடலின் பரிசோதனைகளில் அவரது உடலில் குத்தல்களின் 15 குழுக்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் சில தற்போது வழக்கமான குத்தூசி மருத்துவம் புள்ளிகளாகப் பயன்படுத்தப்படும் இடங்களில் காணப்பட்டன. இது குத்தூசி மருத்துவம் போன்ற நடைமுறைகள் வெண்கல காலத்தின் ஆரம்பத்தில் ஈராசியாவின் சில பகுதிகளில் நடைமுறையில் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றாகப் பார்க்கப்படுகிறது.[24]
மத்தியகால வரலாறு
குத்தூசி மருத்துவம் சீனாவில் இருந்து கொரியா, ஜப்பான் மற்றும் வியட்னாம் மற்றும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பரவியிருந்தது.
சீனாவில் குத்தூசி மருத்துவத்தின் சுமார் 90 பணிகள் ஹான் வம்சம் மற்றும் சாங் வம்ச காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. மேலும் 1023 ஆம் ஆண்டில் சாங்கின் ரென்சாங் பேரரசர் நடுக்கோட்டினைச் சித்தரிக்கும் வெண்கலச் சிலையை உருவாக்கவும் பின்னர் அதில் குத்தூசி மருத்துவம் புள்ளிகளைப் பயன்படுத்தவும் கட்டளையிட்டார். எனினும் சாங் வம்சத்தின் முடிவுக்குப் பிறகு குத்தூசி மருத்துவம் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் இதனைக் கல்விமான்களின் தொழிலாகப் பார்ப்பதற்கு மாறாக தொழில்நுட்பமாகப் பார்க்க ஆரம்பித்தனர். பின்வந்த நூற்றாண்டுகளில் மருந்து உட்கொள்ளும் மருத்துவம் பயன்படுத்தப்பட்டதால் இது மிகவும் அரிதானது. மேலும் இது ஷாமனிசம், பேறுகால மருத்துவப் பணியியல் மற்றும் மோக்சிபஸ்டியன் ஆகிய குறைவான கெளரவம் கொண்ட நடைமுறைகளுடன் தொடர்புடையதாக மாறியது.[25] 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய சமயப் பரப்பாளர்களே முதன் முதலில் குத்தூசி மருத்துவத்தை மேற்குப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் எனக் கருதப்படுகிறது.[26] ஆசியா முழுவதும் பயணம் செய்த டானிஷ் அறுவை மருத்துவர் ஜேகோப் டெ பாண்டிட் (Jacob de Bondt) ஜப்பான் மற்றும் ஜாவா இரண்டு நாடுகளிலும் இந்த நடைமுறையை விவரித்தார். எனினும் சீனாவில் மட்டுமே இந்த நடைமுறை பின்தங்கிய வகுப்புகள் மற்றும் படிப்பறிவற்ற பயிற்சியாளர்கள் ஆகியோருடன் பெருமளவில் தொடர்புடையதாகக் கருதப்பட்டது.[27] குத்தூசி மருத்துவத்தின் முதல் ஐரோப்பியக் குறிப்பு ஜப்பானில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்த டச்சு மருத்துவர் வில்லியம் டென் ரிஜ்னே (Willem ten Rhijne) மூலமாக எழுதப்பட்டது. இது 1683 ஆம் ஆண்டில் கீல்வாதம் சார்ந்த மருத்துவக் குறிப்பின் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது. ஐரோப்பியர்களும் கூட அந்த நேரத்தில் மோக்ஸிபஸ்டியனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர் என டென் ரிஜேவும் குறிப்பிட்டிருந்தார்.[28] 1757 ஆம் ஆண்டில் மருத்துவர் சூ டாக்வின் (Xu Daqun) குத்தூசி மருத்துவத்தின் தொடர்ந்த வீழ்ச்சியை விவரித்திருந்தார். அதில் இது சில அனுபவமிக்க பயிற்சியாளர்கள் மட்டுமே இருக்கும் அழிந்த கலை என்று குறிப்பிட்டிருந்தார். அதன் வீழ்ச்சி மருந்துக்குறிப்பு மற்றும் மருந்து உட்கொள்ளலின் பிரபலத்திற்கு ஒரு பகுதியாகக் கூறப்பட்டது. அத்துடன் அது பின்தங்கிய வகுப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டது.[29]
1822 ஆம் ஆண்டில் சீனப் பேரரசின் அரசாணையானது குத்தூசி மருத்துவம் பண்புள்ள கல்விமான்களுக்கு பொருந்தாத நடைமுறையைக் கொண்டிருந்த காரணத்தால் மருத்துவத்துக்கான பேரரசுக்குரிய பயிற்சி நிறுவனத்தில் குத்தூசி மருத்துவத்தின் சிகிச்சை மற்றும் பயிற்றுவித்தலுக்கு உடனடியாகத் தடை விதித்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் தற்போதும் குத்தூசி மருத்துவம் சிறிய அளவிலான ஆய்வு மற்றும் பரிசோதனைகளுடன் ஐயத்துடனும் அதேநேரம் பாராட்டப்பட்டும் இரண்டு நிலைகளிலும் காணப்படுகிறது.[30]
நவீன காலம்
1970௦ ஆமாண்டுகளில் அவசரநிலை குடல்வாலெடுப்புக்கு உட்படுவதற்காக சீனா சென்று வந்த ஜேம்ஸ் ரெஸ்டோன் (James Reston) த நியூயார்க் டைம்ஸில் (The New York Times) ஒரு கட்டுரை எழுதிய பிறகு அமெரிக்காவில் குத்தூசி மருத்துவம் நன்கு அறியப்பட்டது. உணர்வகற்றல் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட சமயத்தில் திரு. ரெஸ்டோன் (Mr. Reston) அறுவை சிகிச்சைக்குப் பின்பான மன உலைவுக்கான குத்தூசி மருத்துவத்தைப் பயன்படுத்தினார்.[31] அமெரிக்காவின் முதல் குத்தூசி மருத்துவத்துக்கான தேசிய அமைப்பான தேசிய குத்தூசி மருத்துவம் அமைப்பு (National Acupuncture Association) (NAA) ஆய்வரங்குகள் மற்றும் ஆய்வுக் காட்சியளிப்புகள் மூலமாக குத்தூசி மருத்துவத்தை மேற்குப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த NAA 1972 ஆம் ஆண்டில் UCLA குத்தூசி மருத்துவம் வலி மருத்துவமனையை உருவாக்கி பணியாளர்களை நியமித்தது. இது அமெரிக்காவின் மருத்துவப் பள்ளி அமைப்பின் முதல் அதிகாரப்பூரிவ மருத்துவமனையாக இருந்தது.[சான்று தேவை] அமெரிக்காவின் முதல் குத்தூசி மருத்துவம் மருத்துவமனை 1972 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி வாஷிங்டன் டி.சியில் மருத்துவர் யாவ் வூ லீ (Dr. Yao Wu Lee) மூலமாகத் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[32][unreliable source?] 1973 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்நாட்டு வருமான சேவையமைப்பு (Internal Revenue Service) குத்தூசி மருத்துவத்தை மருத்துவ செலவினமாகக் கழிப்பதற்கு அனுமதித்தது.[33]
2006 ஆம் ஆண்டில் பி.பி.சி இன் மாற்று மருத்துவத்துக்கான ஆவணப்படத்தில் திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரு நோயாளிக்கு குத்தூசி மருத்துவம் மூலமாக தூண்டப்பட்ட உணர்வகற்றல் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த நோயாளிக்கு பலம் குன்றிய உணர்வு நீக்கி மருந்துகளின் கலவைக் கொடுக்கப்பட்டதால் அது மிகவும் வலிமையான விளைவை ஏற்படுத்தியது பின்னர் தெரியவந்தது. அந்த நிகழ்ச்சி மூளை வருடும் சோதனையின் முடிவுகளில் அதன் நவநாகரிகமான பொருள் விளக்கத்துக்காகவும் விமர்சிக்கப்பட்டது.[34][35][36]
அழகுக்கான குத்தூசி மருத்துவம் தோல் சுருக்கம் மற்றும் வயது முதிர்ச்சியைக் குறைப்பதற்கான முயற்சியாக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.[37][38]
பாரம்பரியக் கோட்பாடு

நோயாளியின் தோலில் ஊசிகள் செருகப்படுகின்றன.
பாரம்பரிய சீன மருத்துவம்

This article includes a list of references, related reading or external links, but its sources remain unclear because it lacks inline citations. Please improve this article by introducing more precise citations where appropriate. (December 2008)
முதன்மைக் கட்டுரை: Traditional Chinese medicine
பாரம்பரிய சீன மருத்துவம் (Traditional Chinese medicine) (TCM) என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக மேம்பட்ட மருத்துவத்தின் முன்-அறிவியல் சார் முன் உதாரணம் சார்ந்ததாக இருக்கிறது. மேலும் வழக்கமான மருத்துவத்தினுள் ஒத்த பகுதி கொண்டிராத கருத்துக்கள் தொடர்புடையதாக இருக்கிறது.[4] பாரம்பரிய சீன மருத்துவத்தில் உடலானது ஜாங்-ஃபூ (脏腑) என்று அறியப்படும் பல்வேறு "செயல்பாடுகளின் அமைப்புக்கள்" அடங்கியதாக இருக்கும் முழுமையாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்புகள் இவற்றுக்கும் உறுப்புக்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாத போதும் குறிப்பிட்ட உறுப்புக்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. ஜாங்க் அமைப்புகள் கல்லீரல் போன்ற திடமான யின் உறுப்புக்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. அதே சமயம் ஃபூ குடல்கள் போன்ற துவாரமுள்ள யாங்க் உறுப்புக்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. உடல் ஆரோக்கியம் என்பது யின் மற்றும் யாங்க் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையின் நிலையாக விவரிக்கப்படுகிறது. இந்த ஆற்றல்கள் சமநிலையின்றி இருக்கும் போது, தடைப்படும் போது அல்லது மந்தமாகும் போது நோய்கள் ஏற்படுவதாகக் குறித்துக் காட்டப்படுகிறது. யாங்க் ஆற்றல் "உயிராதாரமான ஆற்றல்" என தோராயமாக மொழிபெயர்க்கப்படும் குய் என்ற கருத்தில் புறக்கணிக்கத்தக்கதாக இருக்கிறது. யின் ஒத்த பகுதி இரத்தமாக இருக்கிறது. இது பெளதீக இரத்தத்துடன் தொடர்புடைய ஆனால் முழுதும் ஒத்ததாக இல்லாமல் இருக்கிறது. மேலும் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவம் அழுத்தம், வெப்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான இடையீடுகளைப் பயன்படுத்துகிறது. மேலும் குத்தூசி மருத்துவமானது ஜாங்க்-ஃபூ வின் நடவடிக்கையை மாற்றுவதற்கு உடலின் குத்தூசி மருத்துவம் புள்ளிகளில் (சீனத்தில் "புழைகள்" என்று பொருள்படும் 穴 அல்லது சூய் ) பயன்படுத்தப்படுகிறது.
குத்தூசி மருத்துவப் புள்ளிகள் மற்றும் நடுக்கோடுகள்
மேலும் பார்க்க: Acupuncture point மற்றும் Meridian (Chinese medicine)
குய் மற்றும் இரத்தப் பாய்வின் வழியாக 12 முக்கிய மற்றும் எட்டு கூடுதல் நடுக்கோடுகளில் இரண்டு (மாய் என்றும் குறிப்பிடப்படுகிறது) ஆகிய மொத்தமாக 14 "தடங்களை" பெரும்பாலான[dubiousdiscuss] முக்கிய குத்தூசி மருத்துவம் புள்ளிகளாக மரபார்ந்த குறிப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த 14 தடங்களில் இல்லாத மற்ற புள்ளிகளிலும் ஊசி குத்தப்படுகிறது. இடஞ்சார்ந்த வலிக்கு குய் அல்லது இரத்தம் தேங்குவதாக நம்பப்படும் மென்மையான "ஆஷி" புள்ளிகளைக் குத்துவதன் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. 12 முக்கிய தடங்களின் ஜாங்க்-ஃபூ வில் நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், தோற்பை, சிறுநீரகம், இதயஉறை, பித்தப்பை, கல்லீரல் மற்றும் தொட்டறியமுடியாத சேன் ஜியாயோ ஆகியவை இருக்கின்றன. குய் ஜிங்க் பா மாய் எனச் சேர்த்துக் குறிப்பிடப்படும் மற்ற எட்டு பாதைவழிகள் லுயோ நாளங்கள், குவியப் பார்வைகள், குழிவுத் தடங்கள், ரென் மாய் மற்றும் டு மாய் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கின்றன. எனினும் இதில் இறுதி இரண்டு மட்டுமே (இவை முறையே உடல் பகுதியின் முன்புற மற்றும் பின்புற வகிட்டு வசம் ஆகும்) ஊசி குத்தப்படுகின்றன. மீதமுள்ள ஆறு குய் ஜிங்க் பா மாய் 12 முக்கிய நடுக்கோடு சார்ந்த ஊசி குத்தும் புள்ளிகள் மூலமாக இயக்கப்படுகின்றன.
சாதாரணமாக குய் ஆனது தொடர் சுற்றில் ஒவ்வொரு தடம் வழியாகவும் பாய்வதன் மூலமாக வரையறுக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு தடமும் குறிப்பிட்ட அம்சத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் "சீனக் கடிகாரத்தில்" இரண்டு மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது.
நடுக்கோடு வழியாக குய் யின் பாய்வு
ஜாங்க்-ஃபூ
அம்சங்கள்
நேரங்கள்
நுரையீரல்
டாயின்
0300-0500
பெருங்குடல்
யாங்கிமிங்க்
0500-0700
வயிறு
யாங்கிமிங்க்
0700-0900
மண்ணீரல்
டாயின்
0900-1100
இதயம்
ஷாவோயின்
1100-1300
சிறுகுடல்
டாயங்க்
1300-1500
தோற்பை
டாயங்க்
1500-1700
சிறுநீரகம்
ஷாவோயின்
1700-1900
இதயஉறை
ஜூயின்
1900-2100
சேன் ஜியாவோ
ஷாவோயங்க்
2100-2300
பித்தப்பை
ஷாவோயங்க்
2300-0100
கல்லீரல்
ஜூயின்
0100-0300
நுரையீரல் (மீண்டும் நிகழும் சுழற்சி)
ஜாங்க்-ஃபூ வானது யின் மற்றும் யாங்க் தடங்களாகப் பிரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மூட்டின் மீதும் ஒவ்வொரு வகையிலும் மூன்று இடம்பெற்றிருக்கும். குய் உடல் முழுதும் சுழற்சியாக மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் பயணித்து நகர்வதாக நம்பப்படுகிறது. குத்தூசி மருத்துவம் புள்ளிகளுக்குத் தொடர்புடைய வெளிப்புற பாதைவழிகள் குத்தூசி மருத்துவம் விளக்க அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் தடம் தொடர்புடைய ஆழ்ந்த பாதைவழிகள் ஒவ்வொரு உறுப்பு தொடர்புடைய உடல்சார் துவாரத்தினுள் நுழைகின்றன. கையின் மூன்று யின் தடங்கள் (நுரையீரல், இதயஉறை மற்றும் இதயம்) மார்பில் ஆரம்பித்து முன்கையின் உட்புற புறப்பரப்பின் வழியாக பயணித்து கையை அடைகின்றன. கையின் மூன்று யாங்க் தடங்கள் (பெருங்குடல், சேன் ஜியாவோ மற்றும் சிறுகுடல்) கையில் ஆரம்பித்து முன்கையின் வெளிப்புற புறப்பரப்பின் வழியாகப் பயணித்துத் தலையை அடைகின்றன. பாதத்தின் மூன்று யின் தடங்கள் (மண்ணீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம்) பாதத்தில் ஆரம்பித்து காலின் உட்புற புறப்பரப்பின் வழியாக பயணித்து மார்பு அல்லது விலாமடிப்பை அடைகின்றன. பாதத்தின் மூன்று யாங்க் தடங்கள் (வயிறு, பித்தப்பை மற்றும் சிறுநீர்ப்பை) முகத்தில் கண்ணின் மண்டலங்களில் ஆரம்பித்து உடலின் கீழே காலின் வெளிப்புறப் புறப்பரப்பில் பயணித்து பாதத்தை அடைகின்றன. ஒவ்வொரு தடமும் யின் அல்லது யாங்க் அம்சத்துடன் "பூர்த்தியான" (ஜூ- ), "குறைவான" (ஷாவோ- ), "மிகையான" (டாய்- ) அல்லது "பொலிவான" (-மிங்க் ) விதத்தில் தொடர்பு கொண்டிருக்கிறது.
இயற்கை மற்றும் நடுக்கோடுகள் (அல்லது தடங்கள்) மற்றும் ஜாங்க் ஃபூ உறுப்புக்களின் தொடர்பு சார்ந்த வழக்கமான கற்பித்தல் குறிப்புக் கருத்துக்கள் பின்வருமாறு:
தடங்களின் கோட்பாடானது உறுப்புக்களின் கோட்பாட்டுடன் இடைத் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. பாரம்பரியமாக உட்புற உறுப்புக்கள் எப்போதும் சார்பற்ற உள்ளமைப்பு உட்பொருட்கள் தொடர்புடையதாக இல்லை. மாறாக கவனம் தட நெட்வொர்க் மற்றும் உறுப்புகளுக்கு இடையில் உள்ள செயல்பாட்டு மற்றும் நோயியலுக்குரிய இடைத்தொடர்புகள் சார்ந்து மையப்படுத்தப்படுகிறது. இதனால் 12 பாரம்பரிய முதன்மையான தடங்கள் ஒவ்வொன்றும் இன்றியமையாத உறுப்புக்களில் ஒன்று அல்லது மற்றொன்றின் பெயரைத் தாங்கியிருக்கின்றன என்ற அடையாளம் காணல் மிகவும் நெருங்கியதாக இருக்கிறது.
இந்த மருத்துவத்தில் நோயறிதல், நோய் நீக்கியல் மற்றும் புள்ளித் தேர்வு ஆகியவற்றின் முழுமையான கட்டமைப்பு தடங்களின் கருத்தியல் சார் கட்டமைப்பு சார்ந்ததாக இருக்கிறது. "மக்கள் வாழ்வதற்கான, நோய்கள் உருவாகக்கூடிய, மக்கள் சிகிச்சை பெறும் மற்றும் நோய்கள் எழும் 12 முதன்மையான தடங்கள் காரணமாக இது இருக்கிறது." [(ஆன்மீக அச்சு, அதிகாரம் 12)]. எனினும் ஆரம்பத்தில் இருந்து இதனை பாரம்பரிய மருத்துவத்தின் மற்ற அம்சங்கள் போன்று அங்கீகரிக்க வேண்டும். தடக் கோட்பாடு அதன் உருவாக்க கால கட்டத்தில் அறிவியல் சார் மேம்பாடுகளின் நிலையின் வரம்புகளைப் பிரதிபலிக்கிறது. ஆகையால் அந்நாளில் தத்துவம் சார் கருத்தியல் மற்றும் மாய உருத்திரிபு ஆகியவற்றுடன் கறைபட்டதாக இருக்கிறது. அதன் தொடரும் மருத்துவ மதிப்பு அதன் உண்மையான இயல்பைக் கண்டறிவதற்கான பயிற்சி மற்றும் ஆய்வின் மூலமாக மறுசோதனை செய்யப்பட வேண்டிய தேவையிருக்கிறது.[39]
நடுக்கோடுகள் வழக்கமான மருத்துவத்துடன் குத்தூசி மருத்துவத்தின் சமரசத்துக்கான விளைவுகளில் சர்ச்சையின் பகுதியாக இருக்கின்றன. உடல் நலத்துக்கான தேசிய நிறுவனங்கள் (National Institutes of Health) 1997 ஆம் ஆண்டில் மேற்கொண்ட குத்தூசி மருத்துவம் சார்ந்த கருத்துக்கணிப்பு மேம்பாட்டு அறிக்கையில் குத்தூசி மருத்துவம் பயன்பாட்டில் குத்தூசி மருத்துவம் புள்ளிகள், குய், நடுக்கோட்டு அமைப்பு மற்றும் தொடர்புடைய கோட்பாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை உடலின் நவீன காலப் புரிதலுடன் தொடர்புபடுத்துவது சிரமமானதாக இருக்கிறது.[4] சீன மருத்துவத்தில் தடை செய்யப்பட்ட வெட்டிச்சோதித்தல் மற்றும் அதன் விளைவாக உடல் எப்படி செயல்படுகிறது என்ற புரிதல் அதன் உட்புற கட்டமைப்புகளுக்கு மாறாக உடலை சார்ந்த உலகத்துக்குத் தொடர்புடைய அமைப்பு சார்ந்ததாக இருக்கிறது. உடலின் 365 "பிரிவுகள்" ஒரு ஆண்டில் உள்ள மொத்த நாட்களுடன் தொடர்புடையதாக இருந்தன. மேலும் TCM அமைப்பில் முன்மொழியப்படும் 12 நடுக்கோடுகளும் சீனா முழுவதும் இருக்கும் 12 நதிகளைச் சார்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும் வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றின் நவீன ஆய்வுகளில் குய் மற்றும் நடுக்கோடுகளின் இந்த தொன்மையான பாரம்பரியங்கள் குறித்த ஒத்த நிலைகள் ஏதுமில்லை. மேலும் இன்றைய அறிவியல் அறிஞர்களால் இவற்றின் இருப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் எந்த ஆதாரங்களையும் கண்டுபிடிக்க இயலவில்லை.[40] மின் எதிர்ப்பு ஆய்வுகளில் 2008 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திறனாய்வில் முடிவுகள் குறிப்பாக தெரிவிப்பதாக இருந்த போதும் கிடைக்கும் ஆய்வுகள் குறிப்பிட்ட வரம்புகளுடன் மோசமான தரத்தில் இருந்ததாக முடிவு செய்யப்பட்டது. மேலும் இதன் காரணமாக குத்தூசி மருத்துவம் புள்ளிகள் அல்லது நடுக்கோடுகளின் இருப்பைப் பறைசாற்றுவதற்கான தெளிவான சான்றுகள் ஏதும் இருந்திருக்கவில்லை.[41]
பாரம்பரிய நோயறிதல்
ஒரு குத்தூசி மருத்துவம் நிபுணர் அவர் பயன்படுத்தும் பாரம்பரியம் சார்ந்து நோயாளியின் நோயறிதலைக் கண்டறிவதற்காக அவரைக் கவனித்து கேள்விகள் கேட்டு பின்னர் எந்த புள்ளியைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்வார். TCM இல் ஆய்ந்தறிதல், ஒலிச்சோதனை மற்றும் நுகர்தல், வினவுதல் மற்றும் தொட்டாய்வு ஆகிய நான்கு நோயறிதல் முறைகள் இருக்கின்றன.[42]
ஆய்ந்தறிதல் என்பது முகம் மற்றும் குறிப்பாக நாக்கின் மீது கவனம் செலுத்துவதாக இருக்கிறது. இதில் நாக்கின் அளவு, வடிவம், விரைப்பு, நிறம் மற்றும் மேற்பூச்சு ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் முனையைச் சுற்றி பல் குறியீடுகளின் இருப்பற்ற நிலை அல்லது இருப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
ஒலிச்சோதனை மற்றும் நுகர்தல் போன்றவை முறையே குறிப்பிட்ட ஒலிகளைக் கேட்பதற்கு (மூச்சுத்திணறல் போன்றவை) மற்றும் உடல் நாற்றத்தை உணர்வதற்குக் குறிப்பிடப்படுகிறது.
வினவுதல் சில்லிடுதல் மற்றும் காய்ச்சல், வியர்த்தல், சாப்பிடும் விருப்பம், தாகம் மற்றும் சுவை, மாசுநீக்குதல் மற்றும் சிறுநீர் கழிதல், தூக்கம் மற்றும் மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் ஆகிய "ஏழு வினவல்களில்" கவனம் செலுத்துகிறது.
தொட்டாய்வு மென்மையான "ஆஷி" புள்ளிகளுக்கான உடல் உணர்வு மற்றும் அழுத்தத்தின் இரண்டு நிலைகளில் (மேலோட்டமான மற்றும் ஆழ்ந்த) மற்றும் மூன்று நிலைப்பாடுகள் கன், குவான், சி (மணிக்கட்டு மடிப்புக்கு மிகவும் அருகில் இருப்பது மற்றும் ஒன்று மற்றும் இரண்டாவது விரல்களின் அகலத்திற்கு அருகில் இருப்பது, பொதுவாக சுட்டு விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல்களைத் தொட்டு ஆய்வு செய்யப்படுகிறது) ஆகியவற்றில் வலது மற்றும் இடது கதிரியக்கத் துடிப்புகளின் தொட்டாய்வு ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது.
குத்தூசி மருத்துவத்தின் மற்ற வடிவங்களில் கூடுதல் நோயறிதல் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மரபார்ந்த சீன குத்தூசி மருத்துவத்தின் பல வடிவங்களில் அத்துடன் ஜப்பானிய குத்தூசி மருத்துவத்தில் தசைகள் மற்றும் ஹாரா வைத் (அடிவயிறு) தொட்டுணர்தல் நோயறிதலில் மையமாக இருக்கின்றது.
பாரம்பரிய சீன மருத்துவக் கண்ணோட்டம்
TCM ஆனது உயிரிமருத்துவ நோயறிதலுக்கு மாறாக "சுருதி குலைவதின் உருப்படிமத்தின்" சிகிச்சை சார்ந்ததாக இருக்கின்ற போதும் இரண்டு அமைப்புகளிலும் பழக்கமுடைய நிபுணர்கள் இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கின்றனர். சுருதி குலைவதின் கொடுக்கப்பட்ட TCM உருப்படிமம் உயிரிமருத்துவ நோயறிதலில் குறிப்பிட்ட சில வரம்புகளில் பிரதிபலிப்பதாக இருக்கலாம். ஆகையால் மண்ணீரல் குய்யின் குறைபாடு என்று அழைக்கப்படும் உருப்படிமம் நீண்டகால சோர்வு, வயிற்றுப்போக்கு அல்லது கர்பப்பை வெளித்தள்ளல் போன்றவையாக வெளிப்படலாம். அதே போன்று கொடுக்கப்பட்ட உயிரிமருத்துவ நோயறிதலுடன் கூடிய நோயாளிகள் எண்ணிக்கை TCM உருப்படிமங்களில் மாறுபாட்டைக் கொண்டிருக்கலாம். இந்த அவதானிப்புகள் TCM சூத்திரமான "ஒரு நோய், பல உருப்படிமங்கள்; ஒரு உருப்படிமம், பல நோய்கள்" என்பதின் கூட்டடைவாக இருக்கிறது. (காப்ட்சக், 1982)
மரபார்ந்து மருத்துவ நடைமுறைகளில் குத்தூசி மருத்துவம் சிகிச்சை பொதுவாக உயர்ந்தளவில் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது. மேலும் மெய்யறிவார்ந்த அமைப்புகள் மற்றும் தற்சார்புடைய உள்ளுணர்வுத் தாங்கள் சார்ந்தவையாகவும் அறிவியல் சார் ஆய்வுகளால் கட்டுப்படுத்த இயலாததாகவும் இருக்கின்றன.[43]
.[15]